காரணப்பெயர்
அனைத்து ஊர்களின் பெயருக்குள் ஒரு காரண வரலாறு ஒழிந்திருக்கும். பொட்டல்புதூர் என்ற பெயர் விளங்கவும் வரலாற்றுக் காரணம் உண்டு.
பண்டைய காலத்தில் எவரும் புகலிடமாக்கிக் கொள்ளாத சமயத்தில் வெட்ட வெளி "பொட்டல்" காடாக இந்த இடம் இருந்தது. மனித குடியேற்றத்திற்கு அவசியத் தேவையான நீர்-நிலம் வசதிகள் மிகச் செழிப்பான நிலையை பெற்றிருந்தது.
வசிப்பதற்குத் தகுந்த இடமாக தேர்ந்தெடுத்து மக்கள் பொட்டலாக இருந்த இடத்தில் குடியேறத் துவங்கினர். குடியேற்றம் அதிகரிக்க பொட்டலாக இருந்த இடம் புதிய ஊராக மாறியதால் ''பொட்டல் - புது ஊர் - பொட்டல்புதூர்'' என்ற காரணப் பெயர் நிலைத்து விட்டது!
முன்னோர்கள், பின் வழித்தோன்றல்களுக்கு செவிவழிச் செய்தியாக எத்தி வைத்த சரித்திரம்.
ஆறு தலைமுறைகளை சந்தித்த 104 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் சொல்லியது. தாத்தா-தந்தை என்று தனக்கு முந்திய இரு தலைமுறைகளையும், தன் தலைமுறை-மகன்-பேரன்-கொள்ளுப்பேரன், என 6தலைமுறைகளைக் கண்ட அனுபவசாலிப் பாட்டி சொல்லிய காரணப்பெயர் வரலாறு.
ஒஹோ..பாட்டி சொன்ன கதையா...! என்று சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். ஊரின் மொத்தக் கருத்தும் இதுதான்.
வளமான நீரோட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கரையோரத்திலேயே பொட்டல்புதூர் கிராமம் அமைந்திருக்கிறது.
தற்கால மக்கள், வீட்டைத் தேடி தண்ணீர் வருகிறது. பண்டைய கால மக்கள் நீர் இருக்கும் நிலத்தை நோக்கியே புகலிடத்தை நகர்த்தினார்கள். நீர் வளம் பெற்ற பொட்டலை புகலிடமாக்கி- குடிபெயர்ந்த முதல் மனிதர் எவரோ அவரும் ஒரு கொலம்பஸ் தான்.