தென்காசியில் கனமழை

நெல்லையில் பலத்த மழை: பள்ளிக்குள் வெள்ளம்- மாணவிகள் அவதி

வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007

நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் தென்காசியில் பள்ளிக்குள் வெள்ளம் புகுந்ததால் மாணவிகள் பெரும் அவதிப்பட்டனர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 5 தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில், தென்காசியில் கன மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளநீர் புகுந்தது.

பள்ளி சற்று தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை நீர் வடிகால் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனால் 2,100 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் மழை நீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் 24 வகுப்பறைகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கன மழையால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு:

நெல்லையில் பெய்த கனமழைக்கு ஒரே நாளில் மணிமுத்தாறு அணை 3 அடி உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 78 மி.மீ மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு,

செங்கோட்டை-78, அம்பாசமுத்திரம்-40, நாங்குநேரி-28, பாளையங்கோட்டை-28.2, ராதாபுரம்-50, சங்கரன்கோவில்-57.3, தென்காசி, சிவகிரி-65.2, திருநெல்வேலி-12.2, ஆலங்குளம்-17.34 என பதிவாகியுள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைபகுதிகளில் விடிய விடிய மழை பெய்ந்துள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணையில் 119.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 120.50 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1,698 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 749 கன அடி தண்ணீர் திறநது விடப்படுகிறது.

மேலணையில் 68 மீ.மீ, கீழணையில் 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 20 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 71 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அணைக்கு விநாடிக்கு 27.73 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதியில் 52 மி.மீ, ராமநதியில் 17 மி.மீ, கருப்பாநதியில் 35 மி.மீ. குண்டாறில் 12 மி.மீ, அடவிநாயினார் அணையில் 31 மீ.மீ, நம்பியாறில் 10 மி.மீ, கொடுமுடியாறில் 20 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Labels: ,


 

நெல்லை மாவட்டத்தில் மழை.

களக்காடு, நவ. 11-

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நெல்லை, தூத் துக்குடி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை நீடிப்பதால் அணைகளில் நீர் கிடு கிடுவென உயர்ந்து வருகின்றன. இன்று காலை 6 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி பகுதியில் அதிக பட்சமாக 65.5 மி.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலையில் 136 மி.மீ. மழை யும் பதிவாகி உள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று 129.20 அடியாக இருந்த பாப நாசம் அணை நீர்மட்டம் 130 அடியாகவும், 73.25 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியாகவும் உயர்ந்துள்ளது.

கருப்பாநதி அணை பகுதி யில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 62.27 அடி யாக இருந்தது. இன்று காலை 3 அடி உயர்ந்து 65.29 அடியாகி உள்ளது. அணைப்பகுதியை பொறுத்த வரை பாபநாசம் அணையில் 45 மி.மீ. மழையும், கீழணையில் 70 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 73 மி.மீ. மழையும், சேர்வலாறில் 24 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதர பகுதி களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ராதாபுரம்- 19

நாங்குநேரி- 65.5

அம்பை- 25

ஆலங்குளம்- 20.2

சிவகிரி- 54.2

தென்காசி- 23.3

நெல்லை- 16.4

திருச்செந்தூர்- 3.2

காயல்பட்டினம்-32

குலசேகரப்பட்டினம்-26

விளாத்திகுளம்-20

காடல்குடி- 7

சூரங்குடி- 30

வைப்பார்- 12

கோவில்பட்டி- 30

கயத்தார்- 37

கடம்பூர்- 51

கழுகுமலை- 136

ஓட்டப்பிடாரம்- 17

மணியாச்சி- 62

கீழஅரசடி- 2

எட்டயபுரம்- 9

சாத்தான்குளம்-15.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையால் ரோடு களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

இதனால் அங்குள்ள கால்வாயிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கால்வா யில் களக்காடு-சிதம்பராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பாலம், கீழ கருவேலங்குளம்- மஞ்சுவிளை செல்லும் வழியில் உள்ள பாலம் ஆகிய 2-ம் வெள்ளத்தில் மூழ்கின.

இதனிடையே நாங்குநேரி யன் கால்வாயில் கருப்பசாமி கோவில் அருகே திடீர் என்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெள்ள நீர் அங்குள்ள சர்ச் தெரு, நகர தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய தெருக் களை மழை நீர் சூழ்ந்தது.

சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

இதனிடையே களக்காடு விநாயகத்தான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வயல் வெளிகளில் தேங்கியது. தாமரைகுளமும் உடையும் நிலை ஏற்பட்டுள் ளது.

வெள்ளம் பாதித்த இடங்களை களக்காடு ïனியன் சேர்மன் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பார்வை யிட்டனர்.

சிங்கையில் கடந்த சில நாட் களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் தெருக் களில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது.

நீர்பிடிப்பு பகுதியான காரையார்-சேர்வலார், மணி முத்தாறு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளன. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நெல்லை, நவ. 11-

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நெல்லை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அணை நீர்பிடிப்பு பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன்கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்டு இருப்பது 2-வது முறையாகும்.

Labels:


 

மறுமொழிகள் :
மறுமொழி சோதனைக்காக
 
Post a Comment

<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்